பரிசுத்தவாட்டிகள் பன்னிருவர்

60.00

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் (1912-1990) அவர்கள் தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்தவர். பள்ளி ஆசிரியர், வேதாகமக் கல்லூரி பேராசிரியர், முதல்வர், அருட்பணியாளர் மற்றும் எழுத்தாளர் என பல துறைகளிலும் ஜொலித்தவர். திருச்சபையின் வரலாறு மற்றும் திருச்சபையின் வெற்றிக்குக் காரணமான தேவ மனிதர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள இவர் எழுதிய நூல்கள் ஒரு திறவுகோல் என்றால் அது மிகையாகாது. எளிய மற்றும் வட்டார வழக்கு தமிழில் எவரும் புரிந்து கொள்ளும்படி ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை எழுதுவது இறைவன் இவருக்குக் கொடுத்த வரம். அனேக புத்தகங்களை மட்டுமல்ல, அனேக கிறிஸ்தவ தலைவர்களையும் இவர் தன் திருப்பணி மூலமாக உருவாக்கி இருக்கின்றார்.

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்கள் திருநெல்வேலி திருச்சபை வரலாறு மற்றும் திருச்சபையில் தடம் பதித்த மகத்தான தேவ மனிதர்கள் பற்றி ஏராளமான நூல்கள் எழுதி இருக்கிறார். இப்புத்தகங்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்வதுடன், நாமும் திருச்சபைக்கு நம் பங்காக என்ன செய்ய முடியும் என்ற சவாலை முன்வைப்பதாக இருக்கின்றன. இவ்வரிசையில், நூல் பாடுகள், கொடும் தொற்றுநோய்ப் பரவலில் பெரும் இழப்புகள் மற்றும் எதிர்ப்புகள் மத்தியிலும் எழும்பிப் பிரகாசித்த நம் திருச்சபையின் பக்தி நிறைந்த பெண்கள் சிலரைப் பற்றிய இந்நூல் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவும் நம் முன் ஒரு சவாலையும் வைக்கிறது.

183 in stock

Add to Wishlist
Add to Wishlist

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “பரிசுத்தவாட்டிகள் பன்னிருவர்”

Your email address will not be published. Required fields are marked *