அருட்பணியாளர் ராபர்ட் கால்டுவெல்
₹300.00
ஆசிரியர்: யோ.ஞான சந்திர ஜாண்சன்
வெளியீடு; மோரியா ஊழியங்கள்
அருட்பணியாளர் ராபர்ட் கால்டுவெல் – 1838-ம் ஆண்டு கிறிஸ்தவ மிஷனரியாக தமிழகம் வந்த ராபர்ட் கால்டுவெல், பின்னர் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்று, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’, ‘திருநெல்வேலி வரலாறு’ போன்ற பல அரிய நூல்களை எழுதி சரித்திரம் படைத்த நிகழ்வுகள் உள்பட அனைத்து விவரங்களும் இந்த நூலில் இடம்பெற்று இருக்கின்றன
4 in stock
Description
அருட்பணியாளர் ராபர்ட் கால்டுவெல் – 1838-ம் ஆண்டு கிறிஸ்தவ மிஷனரியாக தமிழகம் வந்த ராபர்ட் கால்டுவெல், பின்னர் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்று, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’, ‘திருநெல்வேலி வரலாறு’ போன்ற பல அரிய நூல்களை எழுதி சரித்திரம் படைத்த நிகழ்வுகள் உள்பட அனைத்து விவரங்களும் இந்த நூலில் இடம்பெற்று இருக்கின்றன. இந்தியா வருவதற்கு அவர் மேற்கொண்ட கடுமையான கப்பல் பயணம், சென்னையில் 3 ஆண்டுகள் வாழ்ந்த போது பெற்ற அனுபவங்கள், இடையன்குடியில் பொறுப்பு ஏற்பதற்காக சென்னையில் இருந்து நடந்தே இடையன்குடி சென்றது, வழியில் தஞ்சைப் பெரிய கோவில், ஸ்ரீரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றைப் பார்வையிட்டது, இடையன்குடியில் பலத்த எதிர்ப்புக்கு இடையே மதப் பிரசாரம் மற்றும் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டது போன்ற பல தகவல்கள் விரிவாகத் தரப்பட்டு இருக்கின்றன. கடற்கரைப் பகுதிகளில் அவர் நடத்திய அகழாய்வுப் பணிகள் பற்றியும் புதிய செய்திகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அனைத்து திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாய் மொழி என்று பலரும் எண்ணிய நேரத்தில், தமிழ் மொழி, சமஸ்கிருதத்தின் துணை இன்றி இயங்கக் கூடிய தனித்துவம் மிக்க மொழி என்பதை கால்டுவெல் உலகம் அறியச் செய்தது இந்த நூலில் சிறப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. கால்டுவெல்லின் குடும்பம் மற்றும் அவரது இறுதி நாட்கள் ஆகியவற்றையும் கொண்டு இருக்கும் இந்த நூல் மூலம், ராபர்ட் கால்டுவெல் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம்
Reviews
There are no reviews yet.