ஏட்டில் வடித்த ஏதேன்’
₹200.00 ₹150.00
டாக்டர் மோ.மைக்கேல் பாரடே
சுமார் 200 பக்கங்களில் பல்வண்ண அச்சமைப்பில் – கண்ணையும் கருத்தையும் கவரும் படங்களோடு – சிறந்த கட்டமைப்பில் வெளிவந்துள்ள இந்நூல், “ஏட்டில் வடித்த ஏதேன்” என்னும் தலைப்புக்கேற்ப, தெய்விக நந்தவனத்தில் மலர்ந்துள்ள 8 வகை மலர்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இப் பகுப்புகளில், பண்பட்ட இக்கவிஞர், பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இதழ்களில் எழுதியனவும், பல்வேறு மாநாடுகள், கவியரங்கங்களில் வாசித்தனவுமாகிய கவிதைகளும் பல்வேறு கிறிஸ்தவச் சிறப்பு விழாக்களுக்காக எழுதிய கவிதைகளும் இயேசுவின் ஏழு சிலுவைத் திருமொழிகள் பற்றிய சிந்தனைக் கவிதைகளும் பல்வேறு இசைப் பேழைகளுக்காக இயற்றிய இசைப்பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
50 in stock
Description
ஏட்டில் வடித்த ஏதேன்
மரபும் புதுமையும் சங்கமிக்கும் கவிதைகளின் அணிவகுப்பு கிறித்தியலுக்குக் கட்டியம் கூறும் விந்தைத் தொகுப்பு கவிதை நுட்பங்கள் மணக்கும் கலை நந்தவனம். சொற்கள் தாமாகவே புனைந்து கொண்டு கவிதைகளாக நிற்கின்றன. ஏக்கம், கோபம், அழுகை, அன்பு, பக்தி எதுவாயினும் கவிதைகளாகப் பூத்துக் குலுங்குகின்றன. அவையே ‘ஏட்டில் வடித்த ஏதேன்” எனும் பெயரில், பாட்டில் வடித்த பைந்தமிழ்ப் பனுவலாய்ப் பரிணமித்துள்ளன. கலை மணம் கமழும் காஞ்சியில் பிறந்து, தமிழ் மணம் கமழும், மதுரையில் மணம் கொண்ட இந்நூல் ஆசிரியராகிய ‘’மதுரைக்காஞ்சியார்”, கால் நூற்றாண்டுக்கும் மேலாக சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும், கலைப்புல முதன்மையர் ஆகவும், பணியாற்றிய சிறப்புக்குரியவர். தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் பேரவை, உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவை, தேசியத் தலைமையாளர் பயிற்சி நிறுவனம், அறிஞர் பேரவை, கிறித்தவ ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் மையம் போன்ற அமைப்புகளில் பொறுப்பு மிக்க பங்களிப்புகளையும், தகைமை சான்ற தலைமைத்துவத்தையும் வழங்கி வருபவர். ‘சிலுவை வழிச் சிந்தனைகள்”, சிலுவையைக் குறித்தே” முதலிய அருளுரைத் தொகுப்புகளையும், “ஈரக்குழல் பூக்கள்”, ‘சிலுவையினடியில் சிந்திய மலர்கள்” போன்ற கவிதைத் தொகுப்புகளையும், ‘ தஞ்சை வேதநாயகர் தமிழ்க்கொடை” , ‘தமிழ்ச் சித்தர் பாடல்களும் விவிலியமும் (கடவுட் கொள்கைகள்) ஆகிய அரிய ஆய்வு நூல்களையும் வழங்கிய பெருமையோடு, ‘ இரட்சணிய யாத்திரிகம்” (மூன்று தொகுதிகள்), வேதநாயக சாஸ்திரியாரின் ‘ முத்தமிழ் முத்துகள் மூன்று” முதலிய நூல்களின் பதிப்பாசிரியராகவும், ‘ ஒரே வழி ” , ‘ புது வாழ்வு ” , ‘ தரு ” ( ஆய்விதழ் ) முதலிய இதழ்களின் ஆசிரியராகவும், ‘ ஞான நொண்டி நாடகம் ” , ‘கிறிஸ்து குலக்கும்மி”, முதலிய அரிய இலக்கியங்களின் உரையாசிரியராகவும், The Pentecostal Century, Cool Waters on a Thirsty Land ” முதலிய ஆங்கில நூல்களின் மொழி பெயர்ப்பு ஆசிரியராகவும், அமைந்து, தாய்த்தமிழுக்குத் தம் பன்முகக் கொடைகளை இன்முகத்தோடு, இடையறாப்பணிகளால் ஈந்து வருபவர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து என இவரது பயணங்களும் தொடர்கின்றன. இவரது கவிதைப் பயணத்தின் நிகழ்நிலைப் பதிவே இந்த ‘ ஏட்டில் வடித்த ஏதேன்’.
சுமார் 200 பக்கங்களில் பல்வண்ண அச்சமைப்பில் – கண்ணையும் கருத்தையும் கவரும் படங்களோடு – சிறந்த கட்டமைப்பில் வெளிவந்துள்ள இந்நூல், “ஏட்டில் வடித்த ஏதேன்” என்னும் தலைப்புக்கேற்ப, தெய்விக நந்தவனத்தில் மலர்ந்துள்ள 8 வகை மலர்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இப் பகுப்புகளில், பண்பட்ட இக்கவிஞர், பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இதழ்களில் எழுதியனவும், பல்வேறு மாநாடுகள், கவியரங்கங்களில் வாசித்தனவுமாகிய கவிதைகளும் பல்வேறு கிறிஸ்தவச் சிறப்பு விழாக்களுக்காக எழுதிய கவிதைகளும் இயேசுவின் ஏழு சிலுவைத் திருமொழிகள் பற்றிய சிந்தனைக் கவிதைகளும் பல்வேறு இசைப் பேழைகளுக்காக இயற்றிய இசைப்பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
கிறிஸ்து நெறி சார்ந்த பல்வகைப் பொருண்மைகளை, இவ்வளவு இனிய தமிழில் வண்டமிழ்க் கவிதைகளாக வடித்திட இயலுமா எனப் படிப்போர் வியந்து சுவைத்துப் பரவசப்படும் வண்ணம் நூலின் உள்ளடக்கம் உள்ளத்தைக் கவருகிறது. கன்மிகு நூல்களை வடிவமைக்கும் கைத்தடி பதிப்பகத்துப் துணையோடு, கிருபா பதிப்பகம் வெளியிடுள்ள இந்தப் புத்தகம்
Reviews
There are no reviews yet.