வேதாகமத்தில் அறிவியல்

100.00

வேதாகமத்தில் காணப்படும் அறிவியல் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்படியாக தெரிந்து கொள்ளப்பட்டிருக்கும் தலைப்புகள், வாசிப்போரின் ஆர்வத்தைத் தூண்டுகிறதாக அமைந்துள்ளது. பதில் எட்டாத அநேக கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் இப்புத்தகம் நல்ல விளக்கத்தைக் கொடுக்கின்ற ஒன்றாக அமைந்துள்ளது. எளிய நடையில், வாசிப்போர் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

8 in stock

Add to Wishlist
Add to Wishlist
SKU: DACMS0004 Category: Tag:

Description

வேதாகமத்தில் அறிவியல்
பரிசுத்த வேதாகமம், ஆன்மீகத்திற்கு தேவையானவற்றை மாத்திரமல்ல உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா காரியங்களையும் உள்ளடக்கியது. மருத்துவம், அறிவியல், கலை, கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் அநேக வாழ்வளிக்கும் வார்த்தைகள் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டது வேதாகமம். இவற்றில் ஒரு பிரிவான அறிவியல் கண்டுபிடிப்புகளை இந்த உலக மனிதர்கள் அறிவிப்பதற்கு முன்பு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேதாகமத்தில் தேவமனிதர்கள் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதி வைத்துள்ளனர். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் காணப்படும் அறிவியல் உண்மைகள் சிலவற்றின் தொகுப்பே “வேதாகமத்தில் அறிவியல்” என்ற புத்தகம் ஆகும். 132 பக்கங்களைக்கொண்ட இப்புத்தகத்தில் கர்த்தரின் படைப்பு முதல் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரைக்கும் உள்ள சில சம்பவங்களில் காணப்படும் அறிவியல் உண்மைகள், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பாளர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில் இவர்கள் வேதத்தில் உள்ள அறிவியலை மறுத்தாலும் கடைசியில் அறிஞர்கள் வெளியிடும் கண்டுபிடிப்புகள் வேதம் கூறும் அறிவியல் தத்துவங்களின் அடிப்படையிலேயே வந்து முடிவடைகின்றன. மனிதனின் படைப்பு, மனித உடல் அமைப்பு, மனிதனின் உணவு முறைகள், மனிதனின் ஆயுள் காலம், நோவாவின் பேழை, யாக்கோபின் ஆடுகள், டைனோசர், மற்றும் பல காரியங்களில் வேதம் கூறும் அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நூலின் ஆசிரியர் பல நூல்களின் ஆதாரங்களோடு கூட தன்னுடைய வாதங்களைத்தொகுத்துள்ளார். வேதாகமத்தில் காணப்படும் அறிவியல் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்படியாக தெரிந்து கொள்ளப்பட்டிருக்கும் தலைப்புகள், வாசிப்போரின் ஆர்வத்தைத் தூண்டுகிறதாக அமைந்துள்ளது. பதில் எட்டாத அநேக கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் இப்புத்தகம் நல்ல விளக்கத்தைக் கொடுக்கின்ற ஒன்றாக அமைந்துள்ளது. எளிய நடையில், வாசிப்போர் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
இதன் ஆசிரியராகிய அருள்திரு. H. ஜாண் சாமுவேல் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஊரைச் சேர்ந்தவர். பள்ளி படிப்பை நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரி படிப்பை நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியிலும், முதுகலை படிப்பை பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியிலும் பயின்றுள்ளார். தன்னுடைய இளங்கலை இறையியல் பட்டத்தை பெங்களூரு ஐக்கிய இறையியல் கல்லூரியில் பெற்றவர். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் குரு அருட்பொழிவு பெற்று, அதே திருமண்டலத்தில் குருவானவராக கிறிஸ்துவின் ஊழியத்தை நிறைவேற்றி வருகிறார்.

Additional information

Weight .3 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேதாகமத்தில் அறிவியல்”

Your email address will not be published. Required fields are marked *